7 மணி நேரம் தீவிரமாக ஆலோசனை…? அதிமுகவின் துணிச்சலுக்கு இதுதான் காரணமா..!

சென்னை,

என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்.. யார் எதிர்த்தாலும் சமாளிச்சுக்கலாம் என்று அதிமுக துணிந்து இறங்கிவிட்டதாம். நேற்று ஒரே நாளில் அதிரடி காட்டியதற்கும் அதிமுகவின் துணிச்சல்தான் காரணமாம்!

அதிமுக சார்பாக தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட போகும் 177 வேட்பாளர்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கடந்த வாரம் 6 வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது.

இந்த நிலையில் நேற்று 171 வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. அதிமுக கூட்டணியில் இன்னும் 10 தொகுதிகள் வேட்பாளர்களும் அறிவிக்கப்படாமல், எந்த கட்சிக்கும் ஒதுக்கப்படாமல் உள்ளது. நாளைக்குள் அதற்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த 177 வேட்பாளர்களை அதிமுக தேர்வு செய்ததே ஒரு துணிச்சலான கதைதான். முதலில் வேட்பாளர் தேர்வு தொடங்கிய போதே கோஷ்டி மோதல் வெடித்து விடுமோ என்ற கேள்வி எழுந்தது. ஓபிஎஸ் டீம், இபிஎஸ் டீம் என்று மோதல் நடக்குமோ என்று நிறைய கேள்விகள் எழுந்தன. ஆனால் இதற்கு எல்லாம் இடம் கொடுக்காமல் தொடக்கத்தில் இருந்தே அதிமுக கட்டுக்கோப்பாக இருந்தது .

இதன் பொருட்டே வேட்பாளர் நேர்காணலை நீண்ட நேரம் நடத்தாமல் ஒரே நாளில் அதிமுக செய்து முடித்தது. நீண்ட நேரம் நடத்தி தேவையில்லாத சர்ச்சைகளை அதிமுக உருவாக்கிக் கொண்டு இருக்கவில்லை. இப்படி இருந்தும் கூட அதிமுக வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ்இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் இதை உடன் முதல்வர் பழனிசாமி மறுத்துவிட்டார்.


இதன் பொருட்டே வேட்பாளர் நேர்காணலை நீண்ட நேரம் நடத்தாமல் ஒரே நாளில் அதிமுக செய்து முடித்தது. நீண்ட நேரம் நடத்தி தேவையில்லாத சர்ச்சைகளை அதிமுக உருவாக்கிக் கொண்டு இருக்கவில்லை. இப்படி இருந்தும் கூட அதிமுக வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ்இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் இதை உடன் முதல்வர் பழனிசாமி மறுத்துவிட்டார்.

இப்படி வேட்பாளர் தேர்வு நடந்த போதுதான் தேமுதிகவும் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனால் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று அதிமுக அதிரடியாக களமிறங்கியது.நேற்று முதல்நாள் மாலை மாவட்ட செயலாளர்கள் எல்லோரையும் சென்னை வர சொன்னது அதிமுக தலைமை. மாலை முழுக்க கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கும் இடங்களை ஆலோசனை செய்து, இறுதி செய்தது அதிமுக.

அதன்பின் நேற்று முதல்நாள் இரவு 9 மணி வாக்கில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் படலம் தொடங்கியது. சுமார் 7 மணி நேரம் விடிய விடிய இந்த மீட்டிங் நடந்தது. இந்த மீட்டிங்கின் போதே அனைத்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. யாருக்கு சீட் கொடுத்தால் பிரச்சனை இருக்காது.. யாரை எல்லாம் கழட்டிவிட்டால் கோஷ்டி மோதல் இருக்காது என்றெல்லாம் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக யாருக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் போனால் பெரிய பிரச்சனை வராது என்று ஆலோசனை செய்துள்ளனர். இதில் சிலருக்கு வாய்ப்பு கொடுக்காமல் போனால் அவர்கள் அமமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் முடிந்த அளவு வலுவான வேட்பாளர்களை வைத்துக்கொண்டு மீதம் உள்ளவர்களை கழட்டிவிடலாம்.. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்.. அவர்கள் அதிருப்தி அடைந்தால் அடையட்டும் என்ற நிலைக்கு அதிமுக வந்துள்ளது .

அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுப்போம். மற்றவர்கள் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரிய சேதாரம் எல்லாம் இருக்காது என்று அந்த 7 மணி நேரம் தீவிரமாக ஆலோசனை செய்துள்ளனர்.ஓபிஎஸ் சிலரின் பெயரை சொல்ல , இபிஎஸ் இன்னும் சிலரின் பெயரை சொல்ல மொத்தமாக பேச்சுவார்த்தைக்கு பின் இரண்டு தரப்பும் 171 பெயரை தேர்வு செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.

சில அதிருப்தி உறுப்பினர்கள் அமமுக பக்கம் போகலாம்.. ஆனால் அதை சமாளித்துக் கொள்ளலாம் என்று அதிமுக முடிவு செய்துள்ளது. தங்கள் தொகுதிகளில் யாராவது போராட்டம் செய்தாலும் பரவாயில்லை. பார்த்துக்கொள்ளலாம் என்று அதிமுக துணிந்து இறங்கியது. நேற்று முதல்நாள் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை இந்த மீட்டிங் நடந்தது. அதன்பின்தான் நேற்று மாலை அதிமுக வேட்பாளர் அறிவிப்பு வெளியானது.

Translate »
error: Content is protected !!