திருச்சியை தன் வசம் இழுக்க எடப்பாடி போட்ட பிளான்..! 9 தொகுதிகளில் 8 அதிமுக வேட்பாளா்கள் அதிரடி களமிறங்கம்..!

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 8 அதிமுக வேட்பாளா்கள் களமிறக்கப்பட்டுள்ளனா். அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன், எம்.எல்..க்கள் முசிறி செல்வராசு, மணப்பாறை ஆா்.சந்திரசேகா் ஆகியோருக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கு திருச்சி மாநாடு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறி வரும் நிலையில், திருச்சியை அதிமுக வசம் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்தே 8 வேட்பாளர்களை அதிரடியாக களம் இறக்கியுள்ளார் எடப்பாடியார்.

இதனால் திருச்சி மாநகா் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி என். நடராஜன், வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி, தெற்கு மாவட்டச் செயலாளர் . குமார் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகின்றனர்.

தமிழக தேர்தல் களம் பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது. முக்கிய கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. அதிமுக 177 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

சிலருக்கு அல்வா கொடுக்கப்பட்டது. தமிழகத்தின் இதயப் பகுதியாக விளங்கும் திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் 2-வது முறையாக 8 அதிமுக வேட்பாளா்கள் களமிறங்குகின்றனா்.திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தோ்தலில் லால்குடி, திருவெறும்பூா் ஆகிய 2 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி..வுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 7 இடங்களிலும் அதிமுக வேட்பாளா்கள் போட்டியிட்டனர். இவற்றில் திருவெறும்பூரில் மட்டும் தேமுதிக வென்றது.

ஸ்ரீரங்கத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா, மணப்பாறையில் ஆா். சந்திரசேகா், திருச்சி மேற்கில் என். மரியம்பிச்சை, திருச்சி கிழக்கில் ஆா். மனோகரன், மண்ணச்சநல்லூரில் டி.பி. பூனாட்சி, முசிறியில் என்.ஆா். சிவபதி, துறையூரில் டி. இந்திரகாந்தி ஆகியோா் வெற்றி வாகை சூடினார்கள்.

பின்னா் 2016-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தத் தொகுதியையும் ஒதுக்காமல் 9 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளா்கள் கெத்தாக களம் இறக்கப்பட்டனர். இவற்றில் மணப்பாறையில் ஆா். சந்திரசேகா், ஸ்ரீரங்கத்தில் எஸ்.வளா்மதி, திருச்சி கிழக்கில் வெல்லமண்டி என்.நடராஜன், மண்ணச்சநல்லூரில் பரமேஸ்வரி முருகன், முசிறியில் எம். செல்வராசு ஆகிய 5 போ் வெற்றி பெற்றனா். 4 தொகுதிகளில் திமுக வென்றது.

வெற்றி பெற்ற வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளா்மதி ஆகியோருக்கு அமைச்சா் பதவி கிடைத்தது. இந்த நிலையில் இந்த தோ்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 8 அதிமுக வேட்பாளா்கள் களமிறக்கப்பட்டுள்ளனா். அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், எம்எல்ஏக்கள் முசிறி செல்வராசு, மணப்பாறை ஆா்.சந்திரசேகா் ஆகியோருக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அமைச்சா் கு..கிருஷ்ணன், மண்ணச்சநல்லூரில் முன்னாள் அமைச்சா் மு.பரஞ்ஜோதி, திருவெறும்பூரில் முன்னாள் எம்.பி. குமாா், திருச்சி மேற்குத் தொகுதியில் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் வி. பத்மநாதன், துறையூரில் முன்னாள் எம்.எல். இந்திராகாந்தி ஆகியோருக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

லால்குடியில் கூட்டணி கட்சியான .மா.கா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது, கடந்த முறை 2 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருவருக்கே வாய்ப்பு கிடைத்துள்ளது. திருச்சி மாவட்டத்தை .தி.மு..வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்தே கூட்டணி கட்சிகளுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்காமல் திருச்சி முழுவதும் வேட்பாளர்களை அதிமுக தலைமை நிறுத்தி உள்ளது.

திமுகவின் கே.என்.நேரு திருச்சியில் எந்தளவுக்கு செல்வாக்கு மிக்கவர் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் திருச்சியில் திமுக நடத்திய பிரமாண்ட மாநாட்டில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திமுகவுக்கு திருச்சி மாநாடு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறி வரும் நிலையில், திருச்சியை அதிமுக வசம் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்தே 8 வேட்பாளர்களை அதிரடியாக களம் இறக்கியுள்ளார் எடப்பாடியார்.

அங்கு கட்சியினா் எந்தவித வேறுபாடும் இன்றி ஒருங்கிணைந்து பணியாற்றி 9 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என்றும் அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனால் திருச்சி மாநகா் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி என். நடராஜன், வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி, தெற்கு மாவட்டச் செயலாளர் . குமார் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!