தன் மீது வீசப்பட்ட விமர்சனங்களை வலது கையால் பிடித்து இடது கையால் தூக்கி எறிந்துள்ளார் கமல்..!

சென்னை,

தன் மீது வீசப்பட்ட இரு விமர்சனங்களை அப்படியே பிடித்து திருப்பி அடித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

கோவை தெற்கில் கமல் போட்டி: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியானது! சமீபத்தில் கொளத்தூர் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தபோது குறிப்பிட்ட ஒரு வார்த்தை யாருக்கும் மறந்திருக்காது. “பகுத்தறிவாளனாக வாழும் என் மீது காவி சாயம் பூசுகிறார்கள்.

நான் நேர்மையில் குளித்தால் சாயம் கலைந்துவிடும்என்று அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக பேசியிருந்தார் கமல்ஹாசன். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் தன் மீது பூசப்பட்ட காவியத்தை கழுவி விட்டார் என்று சொல்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

கமல்ஹாசன் முதன்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்துள்ள தொகுதி தான் இப்போது டாக் ஆஃ தி டவுன். கோவை தெற்கு தொகுதியில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா. அங்கு அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் போட்டியிருந்தால் வானதி சீனிவாசன் வெற்றி எளிதாக இருந்திருக்கக்கூடும். ஆனால் இப்போது கமல்ஹாசன் அங்கு களமிறங்குகிறார். கோவை லோக்சபா தொகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வாங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம்.

எனவே வானதி சீனிவாசன் மற்றும் காங்கிரஸ் இருவருக்குமே இது ஒரு கடுமையான போட்டியாக மாறக்கூடும். அந்த வகையில் பாஜக ஆதரவாளர் என்று எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன். பாஜக போட்டியிடும் தொகுதியில். அதுவும் அந்த கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் போட்டியிடும் தொகுதியில்.

எதிர்த்து நிற்கிறார் கமல்ஹாசன். இப்போது அவர் கொளத்தூர் தொகுதியில் பேசிய பேச்சை ரீவைண்ட் செய்து பார்த்தால் அவரது பேச்சில் இருந்த உண்மை புலப்படும். அதேபோல்தான் மற்றொரு விமர்சனம் சிலரால் அவர் மீது முன்வைக்கப்பட்டது. அது, மயிலாப்பூர்போன்ற ஒரு தொகுதியைஅவர் தேர்ந்தெடுப்பார். ஜாதி ஓட்டுகளை குறி வைப்பார், என்றெல்லாம் சிலர் சமூக வலைத்தளங்களில் கூறிவந்தனர். ஆனால், அதற்கு பெரிய முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன்.

கோவை போன்ற பெருவாரியாக வேறு ஒரு ஜாதி பிரிவினர் இருக்கக்கூடிய தொகுதியை தேர்ந்தெடுத்து, தான் சாதி மற்றும் மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர் என்பதை காட்டும் வகையில் களமிறங்கியுள்ளார் கமல்ஹாசன்.

கமல் மீது வீசப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் வலது கையால் பிடித்து இடது கையால் தூக்கி எறிந்துள்ளார் என்றுதான் இதை பார்க்கிறார்கள். அரசியல் விமர்சகர்கள். சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தனது பாணி தனி பாணி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் கமல்ஹாசன் என்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

 

Translate »
error: Content is protected !!