குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்… தண்ணீரில் பூச்சி மருந்து கலந்ததாக குற்றச்சாட்டு..!

குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள். தொழில் போட்டி காரணமாக குளத்தில் பூச்சி மருந்தை கலந்து கொண்டிருப்பதாக குளம் குத்தகை எடுத்த குத்தகைதாரர் குற்றச்சாட்டு.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியிலுள்ள கக்ரியாகுளத்தை அன்னபிரகாசம் என்பவர் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை முதல் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கியது இதைப் பார்த்த குத்தகைதாரர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்,..

மேலும் நீரில் பூச்சி மருந்து கலந்து இருப்பது நீரை முகர்ந்து பார்த்த போது தெரியவந்துள்ளது. குளத்தை குத்தகைக்கு எடுக்க பல பேர் போட்டி போட்ட நிலையில் தான் இரண்டாவது வருடமாக எடுத்ததால் குளத்தை எடுக்க முடியவில்லை என்ற விரக்தியில் சில எதிரிகள் செய்துள்ளதாக குத்தகைதாரர் குற்றம்சாட்டுகிறார். மேலும் இந்த குளத்து நீரை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் அருந்தும் நிலை உள்ளதால் குளத்து நீரில் பூச்சி மருந்தை கலக்கியவர் யார் என கண்டுபிடித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளத்தில் மீன் வளர்க்கும் குத்தகைதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!