ரமலான் மாதத்தில் இரவு 10 வரை பள்ளிவாசல்கள் திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டும்! – தமுமுக கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான் மாதம் வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், இந்த கட்டுப்பாட்டினால் ரமலான் மாத இரவு தொழுகையை முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும். கடந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாகப் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டன. புனித ரமலானில் தராவீஹ் எனப்படும் இரவுநேர தொழுகையைப் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாமல் முஸ்லிம்கள் கவலை கொண்டனர்.

எனவே, சிறுபான்மை முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் இரவு 8 மணிக்குப் பதிலாக இரவு 10 மணி வரை செயல்படத் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Translate »
error: Content is protected !!