வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன..!

வராக நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து காவல்நிலையம் பின்புரம் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையின் காரணமாக கடந்த 3 தினங்களுக்கு முன்பாக வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வராக நதி ஆற்றில் தொடர்ந்து நீர் அதிகரித்து கடந்த 3 நாட்களாக ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியகுளம் வடகரை காவல்நிலையம் பின்புறம் உள்ள வராக நதி ஆற்றில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஆற்றின் ஓரத்தில் காவல்துறை நிலையத்தில் வழக்கு சம்பவமாக பரிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட  இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் டாட்டா மேஜிக் வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது.

மேலும் ஆற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் வடகரை காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பான வாகங்கள் ஆற்றில் கவிழ்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் ஆற்றில் காண்கிரிட் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!