உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தொற்று பாதித்த பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என கண்டறிய வீடு, வீடாக சென்று பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை செய்தனர். இதில் காய்ச்சல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.