தமிழ்நாடு பொதுத்துறை இணைச் செயலாளராக இருந்த ஏ.ஆர் ராகுல்நாத் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு கடந்த ஆண்டு புதிய மாவட்டமாக செங்கல்பட்டு உதயமாகியது. செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ஜான்லூயிஸ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜான்லூயிஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு பொதுத்துறை இணைச் செயலாளராக இருந்த ஏ.ஆர் ராகுல்நாத் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
அதனைதொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக, ஏ.ஆர் ராகுல்நாத் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்கு முன்பு இருந்த ஆட்சியர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.