சென்னை நேரு உட்புற மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
18,000 விளையாட்டு வீரர்களில் 10,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ .5 லட்சம் ஊக்கத்தொகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.