தமிழக காவல்துறையில் தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு உள்ளிட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:
‘‘தமிழக உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவான சிவில் சப்ளைஸ் சிஐடி டிஜிபி ஜாபர்சேட் அங்கிருந்து மாற்றப்பட்டு தீயணைப்புதுறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தீயணைப்புத்துறை இயக்குநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு வசம் உணவுக்கடத்தல் தடுப்புப் புலனாய்வுப்பிரிவு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அயல் பணியாக மத்திய அரசில் பணியாற்றி வந்த டிஐஜி துரைக்குமார் சென்னை டிஜிபி அலுவலக நிர்வாகப்பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பணியிடம் இதுவரை காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது’’. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.