சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கணக்கில் வராத லட்சக்கணக்கணக்கான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாசாலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு தனிப்படை அதிகாரிகள் இன்று மதியம் அங்கு அதிரடியாக ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 1. 29 லட்சம் ரூபாய்- மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஏரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி கோரி சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு லஞ்சம் பெறுவதாக தகவல் வந்தது. அதன்பேரில் பெரம்பலுார், வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ. 1.7 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விருதுநகரில் புதிதாக கட்டிய வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயம் செய்ய, சிவகாசி முனிசிபாலிட்டி வரித்தண்டலர் கார்த்திகேயன் என்வரை ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் அதிரடியாக கையும் களவுமாக கைது செய்தனர். இதே போல தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்