மாநிலங்களில் 2.74 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதை பற்றி வெளியிட்ட செய்தியில், இதுவரை 41,69,24,550 கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், இதுவரை 38,94,87,442 கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 2,74,37,108 தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 42,12,557 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.