மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சிபிசிஐடி அதிரடி

சென்னை, மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சிபிசிஐடி போலீசார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் உடன் பிறந்த மூத்த சகோதரியை கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தர்மலிங்கம் மீனாட்சி தம்பதி

சென்னை, மயிலாப்பூர் கேசவப்பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மீனாட்சி தம்பதி. பூக்கடை நடத்தி வந்தனர். இவர்களது கடையில் மீனாட்சியின் தங்கை மைதிலி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் வேலை பார்த்து வந்தனர். இதற்கிடையே பாலமுருகனுக்கும், மைதிலிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை மீனாட்சியும், தர்மலிங்கமும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் திடீரென தர்மலிங்கத்துக்கும், மீனாட்சிக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பாலமுருகன், மைதிலி

இந்நிலையில் தர்மலிங்கம், மீனாட்சி சாவில் மர்மம் இருப்பதாக தர்மலிங்கத்தின் அண்ணன் குமார் மற்றும் மீனாட்சியின் மற்றொரு சகோதரியான லதா இருவரும் மீண்டும் மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தனர். இருப்பினும் புகார் கிடப்பில் கிடந்தது. அதனையடுத்து காலதாமதமாக 2018ம் ஆண்டு மயிலாப்பூர் போலீசார் விசாரணையை தொடங்கினர். தனது கள்ளகாதல் விவகாரம் அக்காள் மீனாட்சிக்கும், அவரது கணவர் தர்மலிங்கத்துக்கும் தெரியவந்ததாலும் அவர்கள் பெயரில் உள்ள சொத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக மைதிலி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

லதா

அதனடிப்படையில் மைதிலி, கள்ளகாதலன் பாலமுருகன் மற்றும் மைதிலியின் கணவர் பிரவீன்குமார் அவரது மகன் பிஷாக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கு கோர்ட் உத்தரவின் பேரில் 2018ம் ஆண்டு சிபிசிஐடியின் கைக்கு சென்றது.

கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் கிடந்த இவ்வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்காக தர்மலிங்கம், மீனாட்சி ஆகியோருக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவத்தில் லதாவும் உடந்தையாக இருந்துள்ளது சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கூறுகையில், ‘‘லதாவின் வங்கிக் கணக்கில் ரூ. 11 லட்சம் பணம் தர்மலிங்கத்தின் கணக்கில் இருந்து மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ர். ஏற்கனவே அது தொடர்பாக விசாரணை நடத்தியபோது தர்மலிங்கம் வீடு கட்ட பணம் கொடுத்து உதவியதாக லதா தெரிவித்திருந்தார். ஆனால் போலீசார் சந்தேகம் ஏற்பட்டதும் தீவிர விசாரணை நடத்திய போது தான், லதாவும் இந்த கொலையில் உடந்தையாக இருந்தது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து மீனாட்சியின் சகோதரிகள் லதா, மைதிலி இருவரும் இணைந்து சொத்துக்காக சொந்த சகோதரியான மீனாட்சி மற்றும் அவரது கணவர் தர்மலிங்கத்தை விஷம் வைத்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது’’ இவ்வாறு தெரிவித்தனர்.

 

Translate »
error: Content is protected !!