அமெரிக்காவில் முதல்முறையாக செனட் சபைக்கு திருநங்கை தேர்வு!

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக செனட் சபைக்கு சாரா மெக்.பிரைட் என்ற திருநங்கை வெற்றி பெற்று உள்ளார்.

வெற்றி பெற்றிருக்கும் 31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட், ஜோ பிடனின் ஜனநாயகக்கட்சியை சேர்ந்தவர். டெலாவேரின் முதல் செனட் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த குடியரசு கட்சியின் ஸ்டீவ் வாஷிங்டனை, சாரா தோற்கடித்தார்.

கல்லூரியில் படிக்கும் போது சாரா, ஒபாமா நிர்வாகத்துடன் வெள்ளை மாளிகையில் பணியாற்றிய முதல் திருநங்கை என்ற சிறப்பை பெற்றதுடன், 2016ம் ஆண்டில் பெரிய அரசியல் மாநாட்டில் பேசியுள்ளார்.

இந்த தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்துள்ள சாரா மெக் பிரைட், நாம் செய்து முடித்து விட்டோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி

இதற்கிடையே, அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான டாக்டர்.அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜனநாயக கட்சியின் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுடில்லியில் பிறந்த சேர்ந்த 47 வயதான கிருஷ்ணமூர்த்தி, லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். அவரது பெற்றோர் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ராஜா கிருஷ்ணமூர்த்தி முதன்முதலில் 2016 ல் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!