சென்னையில் நடமாடும் அம்மா உணவகம்… தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி!

சென்னையில் நடமாடும் அம்மா உணவகத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன. இதற்கிடையே, கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் பணியாளர்கள் பசியின்றி வேலை செய்யும் நோக்கில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைந்த விலையில் உணவு வழங்க நடமாடும் அம்மா உணவகத்தைத் தொடங்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டார்.

அதன்படி, சென்னையில் முதல்கட்டமாக 27 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று நடமாடும் அம்மா உணவக வாகனங்கள் செயல்படுத்த அரசு முடிவு செய்தது.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், நடமாடும் அம்மா உணவகத்தை முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைத்து உணவு வழங்கினார்.

தலா ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் அம்மா உணவகங்கள் வடசென்னை, தென்சென்னை மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கை படிப்படியாக விரிவாக்கப்பட்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!