முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது,
வடக்கு மத்தியப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு மோசமாக உள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் 240 கிராமங்களைச் சேர்ந்த 5,950 பேரை மீட்டுள்ளன. விமானப்படை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் 1,950 பேரை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மழை குறைவதால், சாலைகளில் வெள்ள நீரும் குறைகிறது. வெள்ளத்தின் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரிடம் பேசியதாக அவர் கூறினார்.