திருச்சியில் காவலர் தற்கொலை… பணிச்சுமை காரணமா?

திருச்சியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பணிச்சுமை காரணமா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நத்தமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 27). இவர், 2017 ஆம் ஆண்டு பயிற்சி முடித்து, திருச்சி மாநகர் கே.கே. நகர் காவலர் குடியிருப்பில், திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்தார்.

இன்று காலை, நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் குடியிருப்பு அருகில் உள்ளவர்கள் சந்தேகமடைந்து, கே.கே. நகர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, காவலர் நவநீத கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உயிரிழந்த காவலர் நவநீத கிருஷ்ணன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று, கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், திருச்சி மாநகரில் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!