கோயம்பேடு: தக்காளி விலை கடும் வீழ்ச்சி

கடந்த வாரம், மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 20ரூபாய்க்கும் ,சில்லறை விற்பனை நிலையங்களில் கிலோ 25ரூபாய்க்கும் விற்பனையானது.

மொத்த விற்பனையாளர்கள் நேற்று ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளியை 120 ரூபாய்க்கு விற்கத் தொடங்கினர். இதையடுத்து தக்காளியின் தேக்கத்தைத் தடுக்கும் பொருட்டு, வியாபாரிகள் ஒரு பெட்டி தக்காளி 80 ரூபாய் விலை குறைந்து அதிகாலையில் இருந்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இன்று ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் 6 ரூபாய்க்கும், சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் 50 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளதாக மொத்த வியாபாரி ஜபார் பாய் கூறினார். மேலும் தக்காளி தினசரி விற்பனை அளவிற்கு இல்லை. இதன் விளைவாக, தினசரி சந்தைக்கு வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி விலை குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!