நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் கூறுகையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்.
இந்த பிரிவு கொடநாடு தொடர்பான வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்பிரிவில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக சயான், மனோஜ், இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, விசாரணை நடத்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை அனுமதித்த நீதிமன்றம் வழக்கை அடுத்த மாதம் 1 -ந் தேதிக்கு ஒத்திவைத்தது.