வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதில்லை என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதாரணம் என்று அமைச்சர் துரைமுருகன் பாராட்டினார்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்த 21 பேருக்கு மண்டபம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்ற அமைச்சர் துரைமுருகன், முதல்வர் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவற மாட்டார் என்பதற்கு உதாரணமாக இந்த அறிவிப்பை வெளியிட்டார் என தெரிவித்தார்.