பிரதமர் மற்றும் உ.பி.முதல்வருக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்ட இருவர் கைது

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 23 அன்று, பிரகாஷ் வர்மா மற்றும் ரமேஷ் யாதவ் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தலைவர்களை அவதூறாகப் பேசி பதிவு செய்த வீடியோவை ஒன்றை வெளியிட்டனர். இதை பற்றி மந்து ராம் அளித்த புகாரின் பேரில் பன்ஸ்தி சாலை போலீசார் பிரகாஷ் மற்றும் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து இன்று கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!