சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் உள்ள கிங் அப்துல்லா சர்வதேச விமான நிலையத்தில் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ட்ரோன் தாக்குதலை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் தடுத்து நிறுத்தி அழித்தது. ஆனாலும் சில குண்டுகளால் விமான நிலையம் தாக்கப்பட்டது. இதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் சவுதி அரேபிய அரசு ஊடகங்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்,