சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே கீழ்க்கண்ட மின்சார ரயில் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 17 ஆம் தேதிக்கு பராமரிப்புப் பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11, 11.30, 11.45, 12.20, 12.40, 1.40, 2.30 மணிக்கு புறப்படுமாற்றம்ம் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தாம்பரம்-கடற்கரை காலை 11.30, 12.10, 12.30, 1.50, 2.50, 3.30 மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூர் மற்றும் கடற்கரை இடையே காலை 10.40 மணி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15, 12, 1, 1.20, 2, 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15, 11, 12.25, 1.25, 2.15 மணிக்கு மின்சார ரயில் தாம்பரம் மற்றும் கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாளை மற்றும் 17 ஆம் தேதி பிற்பகல் 1.50 மணிக்கு திருமால்பூர் மற்றும் கடற்கரை இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!