கொரோனா குறைந்ததா? அதிகரித்துள்ளதா? தமிழகத்தின் புள்ளி விவரம் இதோ…

தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 2,347 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு மொத்த எண்ணிக்கை 7,52,521ஆகும். சென்னையில் 565 பேர், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,547 பேருக்குத் தொற்று உள்ளது.

தமிழகத்திக் கொரோனாவுக்காக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18,395 ஆகும். மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,08,63,921; இன்று ஒருநாளில் எடுக்கப்பட்ட சோதனை எண்ணிக்கை 77,356 ஆகும்.

கொரோனா தொற்று உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7,52,521. இவர்களில், ஆண்கள் 4,54,454 பேர். பெண்கள் 2,98,034 பேர். மூன்றாம் பாலினத்தவர் 33 பேர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்து, இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,347 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,22,686 பேராக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தாக்கி, 25 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,440 ஆக அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!