நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விஜயதசமி அன்று கோவில் திறப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்பு ஆக்ரமிப்பு நிலம், அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மீட்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 132 கிரவுண்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். அப்போது அறநிலையத்துறையில் குறைகள் பதிவேடு துறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதற்கென இணையதளம் மூலம் வசதிகள் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். நீதிமன்றத்தின் உத்தரவு படி விஜயதசமி அன்று கோவில் திறப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்