பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து 4 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா ஆகிய 4 மாநில முதலமைச்சருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பட்டாசு உற்பத்தி தொழிலை நம்பி 8 லட்சம் பேர் உள்ளனர்.

காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு விற்கவும், வெடிப்பதற்கு தங்கள் மாநிலங்களில் தடை விதித்துள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும் உச்ச நீதி மன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறினார்.

 

Translate »
error: Content is protected !!