ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறவுள்ள தலிபான் பிரதிநிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்க உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டனர். ஆப்கானிஸ்தானுடனான நட்புறவை தொடர இந்தியா தயக்கம் காட்டி வரும் நிலையில் தலிபான்கள் பிரிதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறவுள்ள தலிபான் பிரதிநிகளுடனான கூட்டத்தில் இந்தியா பங்கேற்க உள்ளது.