ஷாருக்கான், அனன்யா பாண்டே வீட்டில் அதிரடி ரெய்டு.. எதற்கு..?

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மும்பையில் உள்ள பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் உள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே நடிகர் ஷாருக்கான் இன்று மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் தனது மகனை நேரில் சந்தித்தார்.இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகர் ஷாருக்கான் வீடு மற்றும் இந்தி நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். ஷாருக்கானின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளை கலைக்கலாம் என்று போதைப்பொருள் பிரிவு போலீசார் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததால் இன்றைய நடைபெறும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!