தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் சராசரியாக 69 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்கள் சராசரியாக 69 புள்ளி மூன்று இரண்டு சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.