கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் 32 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் அனைவருக்கும் எந்த அறிகுறிகளும் இல்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குடகு மாவட்ட துணை ஆணையர் பி.சி. சதீஷ் மற்றும் உயரதிகாரிகளும் அப்பகுதியில் உள்ள பள்ளியொன்றிற்கு நேரில் சென்றார். அவர்கள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.