மேற்கு வங்கத்தில் தீபாவளி, காளி பூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் 2 மணி நேரம் வரை பச்சை பட்டாசுகளை வெடிக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வைரஸில் இருந்து மீண்டு வருபவர்களுக்கும் பட்டாசில் இருந்து வெளியேறும் புகையால் பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவக் குழுக்கள் எச்சரித்துள்ளன. மேற்கு வங்கத்தில் பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் நிலவும் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு தீபாவளி, காளி பூஜை, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, ஷிகது பூஜை ஆகிய பண்டிகைகளின் போது பட்டாசு விற்கவும், பட்டாசு வெடிக்கவும் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது.