பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் 2 முறை பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு காகித நிறுவன துணை மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பணி நியமன ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாரியப்பனிடம் நேரில் வழங்கினார்.