கரை இல்லாத கடற்கரை – சென்னை மெரினா

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரின் பல்வேறு இடங்கள் மழை நீர் தேங்கிய நிலையில் உள்ளது. மேலும் சென்னை மெரினா கடற்கரை அணுகுசாலை முதல் கடற்கரையோரம் வரை மணல் பரப்பு முழுவதும் மழை நீரால் மூழ்கடிக்கப்பட்டு, மழை நீரும் கடலும் இணைந்து கடற்கரை இல்லாத மெரினாவாக காணப்படுகின்றது.

Translate »
error: Content is protected !!