பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கரூர் பேருந்து நிலையம் அருகே வருகை தந்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். பாஜக தலைவர் அண்ணாமலையுடன் பாஜக நிர்வாகிகள் செல்பி எடுத்துக் கொண்டு உற்சாகமாக இருந்தனர்.