தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி உள்ளது. மேற்கு தொடர்சி மலை பகுதியில் மழை பொலிவு குறைந்ததால் அருவிக்கு வரும் நீர் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கும்பக்கரைக்கு மேல் உள்ள மேற்கு தொடர்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்காணல், கொடைக்கானல் உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள கண்மாய்கள் அனைத்தும் ஏற்கனவே நீர் நிறைந்து வழிந்து வருவதால் கும்பக்கரை அருவியில் வரும் நீர் அப்படியே பாம்பாற்றில் சென்று வராக நதி ஆற்றில் கலக்கின்றது. மேலும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.