வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பாலாற்று கரை பகுதியில் ஒட்டிய காமராஜபுரம் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இதுவரை பத்திற்க்கும் மேற்பட்ட காங்கிரீட் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இப்பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு இரண்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறினாலும், இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள். பாலாற்று மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலை தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.