ஒமிக்ரான் தொற்று பரவும் நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தவறான தகவல் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டறிய போதிய டேக்பாத் கிட்டுகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் அரசு, தனியார் நெடுஞ்சாலைகள் எம மொத்தம் 609 மருத்துவமனைகளில் உயிர் காக்கும் திட்டத்தை செயல்படுத்தும் என்றும், அதில் ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு இலவசமாக செலவிடும் என்றார்.