பணமதிப்பிழப்பிற்க்கு பிறகு கள்ள நோட்டு எண்ணிக்கை அதிகரிப்பு

 

2016ம் ஆண்டில் 15 கோடியில் இருந்த கள்ள நோட்டு பறிமுதல் 2020ல் 92 கோடியாக அதிகரித்து உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2016ம் ஆண்டு 15 கோடியில் இருந்த கள்ள நோட்டு எண்ணிக்கை 2020ம் ஆண்டில் அதிகரித்து உள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 2016ம் ஆண்டு 15,92,50,181 கோடி கள்ள நோட்டுகள் இந்தியாவில் கைப்பற்றப்பட்டது; 2017ம் ஆண்டில் கைப்பற்ற பணம் 28,10,19,294 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2018ம் ஆண்டில் 17,95,36,992 கோடியாகவும், 2019ம் ஆண்டில் 25,39,09,130 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுளு 2020ம் ஆண்டில் பன்மடங்கு உயர்ந்து 92,17,80,480 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டில் கொரோனா பொது முடக்கம் காரணமாக பெரும் பெருளாதார இழப்பு நேரிட்டது. மேலும், ரிசர்வ் வங்கியின் தகவலின் படி வங்கிகளில் 2016-17ம் ஆண்டில் 7,62,072 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இவை 2017-2018 ஆண்டில் 5,22,783 நோட்டுகளாகவும், 2018-2019ம் ஆண்டில் 3,17,384 நோட்டுகளாக தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. இதேபோல், 2019-2020ம் ஆண்டில் வங்கிகளில் 2,96,695 கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும், 2020-2021ம் ஆண்டில் 2,08,625 நோட்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக  எழுத்துப்பூர்வ விளக்கத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!