திராட்சை ஆராய்ச்சி நிலையத்தை, வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கீழ் கொண்டுவர கோரிக்கை

 

ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தை, வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கீழ் கொண்டுவர மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கோரிக்கை

திராட்சை சாகுபடியில் பெரும் பங்கை தமிழகத்தின் தேனி மாவட்டம் உள்ளடக்கியுள்ளது. மாநிலத்தில் 2,800 ஹெக்டேர் நிலத்தில் திராட்சை பயிரிடப்படுகிறது என்றால் அதில் 2,184 ஹெக்டேர் நிலம் தேனி பாராளுமன்ற தொகுதிக்குள் வருவதாகவும் அதனால் வணிக ரீதியாக சாகுபடி பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என மக்களவையில் உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத் தெரிவித்தார். மேலும், திராட்சை சாகுபடியில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு திராட்சை சாகுபடி மீதான ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதால் தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள  “ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய”த்தை அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் சேர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மேலும், ஆராய்ச்சி நிலையத்திற்கு தேவையான நிதி, பணியாளர்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதாக மக்களவையில் பேசினார்.

Translate »
error: Content is protected !!