மத்திய பிரதேசத்தில் காணாமல் போன பெண் சிறுத்தைக்கு பதிலாக, காயமடைந்த ஆண் சிறுத்தையை மீட்டு, உயிரியல் பூங்காவில் வனத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
இந்தூரில் உள்ள கமலா நேரு உயிரியல் பூங்காவில் இருந்து, கடந்த 1-ம் தேதி எட்டு மாத பெண் சிறுத்தை குட்டி திடீரென காணாமல் போனது. கிட்டத்திட்ட ஒரு வாரமாக போக்கு காட்டி வரும் அந்த பெண் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில், வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வனத்துறையினருக்கு சொந்தமான ஓய்வு இல்லத்தின் அருகே காயத்துடன் காணப்பட்ட சிறுத்தையை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அந்த சிறுத்தை காணாமல் போன பெண் சிறுத்தை இல்லை என தெரியவந்தது.