ஒமிக்ரான் வைரஸ் வேகாமாக பரவி வருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா மாறுபாடுகளில் இதுவரை கண்டறியப்பட்ட மாறுபாடுகளிலேயே ஒமிக்ரான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இதனால் உலக நாடுகள் பீதியில் உள்ளனர். இது கோவிட 19 வகையை ஒப்பிடும் போது வேகமாக பரவக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுவரை 57 நாடுகளில் புதிய வகை ஒமிக்ரான் மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்டா மாறுபாட்டைக் காட்டிலும் தீவிரத்தன்மை சமமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் கூட அதிகமான மக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அதிகரிக்கும் எனவும் எனினும் பாதிப்பு அதிகரிப்பதற்கும் இறப்புகள் அதிகரிப்புக்கும் இடையில் கால தாமதம் ஏற்படலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.