தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் 71 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாட்களிலிருந்து தக்காளி விலை 140 ரூபாய் வரையிலும் அதிகபட்சமாக விற்பனையாகி வருகிறது, அதனடிப்படையில் கடந்த வாரம் 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது மொத்த வியாபார விலைக்கு 90 ரூபாயும் சிறு வியாபாரிகள் 100 ரூபாய்க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் கீழ் இயங்கும் பண்ணைப் பசுமை கடைகளில் 71 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று 75 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி விலையை நேற்றோடு ஒப்பிடுகையில் 4 ரூபாய் இன்று கிலோவிற்கு குறைந்துள்ளது. வெளிக்கடைகளோடு ஒப்பிடும்போது 29 ரூபாய் குறைவாக பண்ணைப் பசுமை கடைகளில் கிடைப்பதால் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.