முழு அடைப்பு நடத்தி ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி

 

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு நடத்தி துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இதில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.  இந்திய நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்திய இச்சம்பவம் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் இருந்த ராணுவ வீரர்களின் உடல்கள் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சூலூர் விமான படைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள இந்திய மக்கள் விபத்தில் இழந்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பள்ளிக்கூடங்கள், தனியார் அமைப்புகள், சமூக சேவகர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் இன்று முப்படை தளபதி பிபின் ராவத் இழப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டு ராணுவ வீரர்களுக்கான துக்கத்தை வியாபாரிகள் அனுசரிக்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!