காலியாக காட்சியளிக்கும் போராட்ட களம்

 

டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தங்களது வீட்டிற்கு திரும்பியதால், டெல்லி போராட்டக் களங்கள் காலியாக காட்சியளிக்கின்றன.மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட விவசாயிகள், சிங்கு போராட்டக்களத்தில் இருந்த கூடாரங்களை அகற்றி விட்டனர்.

இதனையடுத்து, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, ஹாஜிபூர் எல்லையில் முற்றுகையிட்டிருந்த விவசாயிகள், தங்களது போராட்டத்தை கைவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் நடனமாடி அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!