3 ஆண்டுகளில் ரூ.1.16 கோடி வருவாய்

 

2018-2021 வரை பயணிகள் மூலமாக 1,16,984.23 கோடி ரூபாய் ரயில்வே அமைச்சகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா முடக்க காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் சாதாரண ரயில்களின் கட்டணத்தை விட அதிகமாக உள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது 2020 மார்ச் 23ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை நிறுத்தப்பட்டது என்றும் பின்னர் பாதிப்பு குறைவு மற்றும் தேவையைப் பொருத்து சிறப்பு ரயில்கள் ஆக இந்திய ரயில்வே ரயில்களை இயக்கியதாக  மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சகம் தரப்பில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-2019 ஆண்டுகளில் 51,066.65 கோடி ரூபாய் பயணிகள் மூலமாக மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு வருவாயாக கிடைத்துள்ளது. இதேபோல், 2019-2020ம் ஆண்டில் 50,669.09 கோடி ரூபாயும், 2020-2021ம் ஆண்டில் 15,248.49 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.  கடந்த நவம்பர் 19ம் தேதி முதல் ரயில்களில் உணவு சமைத்து வழங்க உத்தரவு ரயில்வே அமைச்சகம் மூலம் வளங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!