20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த 21 வயது ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகியாக சுஷ்மிதா சென், 1995 ஆம் ஆண்டு பட்டம் வென்றார். அதன் பிறகு கடந்த 2002ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த லாரா தத்தா பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்தியாவை சேர்ந்த 21 வயது இளம் அழகி ஹர்னான் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். 70-வது பிரபஞ்ச அழகிப் போட்டி நேற்று இஸ்ரேலின் எலியாட்டில் நடைபெறது. அப்போது நடுவர்களின் கேள்விக்கு அசத்தலாக பதிலளித்து பிரபஞ்ச அழகி பட்டத்தை கைப்பற்றினார் ஹர்னாஸ் சாந்து. உலகளவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மெக்சிகோவைச் சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகி ஆண்ட்ரியா மெசாவால், ஹர்னாஸ் சாந்துவுக்கு கிரீடம் அணிவித்தார். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக ஹர்னாஸ் சாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்னாஸ் சாந்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.