இந்தோனேசியாவில் இன்று காலை 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் மௌமரே நகருக்கு வடக்கே 95 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.