குமரி: கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது

குமரி மாவட்டம் அருமையில் கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

19 வயது கல்லூரி மாணவி ஒருவரிடம் அவருக்கு பண உதவி செய்வது போல் பழகி அவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டு பலாத்காரம் செய்ததாக ராணுவ வீரர்கள் சஜித், கிரீஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் ஜாண் பிரிட்டோ, லிபின் ஜான் ஆகிய 4 பேர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஜான் பிரிட்டோ, லிபின் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ராணுவ வீரர்கள் சஜித் மற்றும் கிரீஸ் ஆகிய இருவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!