எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் முடங்கியது. லக்கிம்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக் கோரி இன்று காலை மக்களவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி எழுப்பினர். இதனால் அவை காலை முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிற்பகல் கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் இருக்கை முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.