லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் குடும்பத்தை கனிமொழி எம்.பி. நேரில் சென்று ஆறுதல்

காஷ்மீர், லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப் பிரிவில் பணியாற்றி வந்த, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள திட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி, கடந்த 18 ஆம் தேதியன்று வாகன விபத்தில் உயிரிழந்தார்.

லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க உத்தரவிட்டார். மேலும் ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்கு  நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அமைச்சர்  கடம்பூர் ராஜு அவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்த இரங்கல் செய்தியில், நம்மை காக்கும் பணியில் உயிரிழந்த வீரர் கருப்பசாமிக்கு தனது வீரவணக்கத்தை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி எம்.பி., அவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
Translate »
error: Content is protected !!